கொழும்பு துறைமுகம் ஈட்டியுள்ள பெருந்தொகை இலாபம்
இந்த ஆண்டின் (2025) முதல் 8 மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபமாக ஈட்டியுள்ளதாக இலங்கை துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு துறைமுகம் குறித்த காலக் கட்டத்தில் ஈட்டிய நிகர இலாபம் ரூ. 18.9 பில்லியனாக இருந்துள்ளது.
இது ஆண்டுக்கு ஆண்டு தோராயமாக ரூ. 13 பில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது, இது 71% வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கின்றது.
மேம்பாட்டுத்திட்டங்கள்
தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்கள், மேம்பட்ட சேவை செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக, கொள்கலன் கையாளுதல் 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 6% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
கிழக்கு முனையம் மற்றும் ஜெயா கொள்கலன் முனையம் போன்ற உள்கட்டமைப்புகள் நிறைவடைந்தவுடன், மேலும் திறன் விரிவாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை ஒரு பிராந்திய பரிமாற்றல் மையமாக நிலைநிறுத்துவதற்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த இலாபங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதிகார சபை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




