கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 15 கோடியே 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
43 வயதுடைய வர்த்தகரான நபர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அவர் அடிக்கடி விமானத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நேற்று காலை காலை 09.20 மணியளவில் Fly Dubai Airlines இன் F.Z.-547 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விசாரணை
விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு சுங்கச்சாவடி வளாகத்தில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்திற்கு வெளியே செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டார்.
பயணி தனது இடுப்பில் 8 பார்சல்களால் தயாரித்து மறைத்து வைத்திருந்த 4 கிலோ 400 கிராம் எடையுடைய 42 தங்க பிஸ்கட் மற்றும் அரைவாசி தங்க பிஸ்கட் மற்றும் 2 கிலோ 600 கிராம் எடையுள்ள நகைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
