இந்தோனிசியாவில் கடும் நிலநடுக்கம்! இலங்கையில் வெளியிடப்பட்ட தகவல்!
இந்தோனேசிய ஜகார்த்தாவில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சமுத்திரத்தின் 129 கிலோமீற்றர் துாரத்தில் ஜகார்த்தாவில் சுமார் 37 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது கொழும்பில் இருந்து 3207 கிலோமீற்றர் துாரத்தில் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இன்று ஜகார்த்தா நேரப்படி மாலை 4.05 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் இருந்து 100 கிலோமீற்றர் பகுதியில் சுமார் 17 லட்சம் பேர் வாழ்கின்றனர்.
எனினும் இந்த நில அதிர்வின் தாக்கங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
அதேநேரம் இலங்கைக்கு இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரவை ஆபத்து ஏற்படாது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri