“இந்திய கிரிக்கட் அணியின் ரவிசந்திரன் அஷ்வின் இலங்கையில் பிறந்திருந்தால்“ அதிகமாக பகிரப்படும் டுவிட்டர் பதிவுகள்
இந்திய கிரிக்கட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் இலங்கையில் பிறந்திருந்தால், அவர் முத்தையா முரளிதரனை போன்று அதிக விக்கட்டுக்களை கைப்பற்றியிருப்பார் என்று ஐஸ்லாந்தின் கிரிக்கட் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு, குறித்த டுவிட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், அதிகமான கிரிக்கட் ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
தமக்கு பின்னர் 800 விக்கட்டுக்களை என்ற இலக்கை அஷ்வின் மாத்திரமே கைப்பற்ற முடியும் என்று முன்னதாக முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் இலங்கையில் பிறந்திருந்தால், முரளிதரனை போலவே 800 விக்கட்டுகளை கைப்பற்றியிருப்பார் என்று ஐஸ்லாந்து கிரிக்கட் டுவிட்டரில் கருத்து பகிரப்பட்ட நிலையில் அது அதிகமானோர் மத்தியில் பகிரப்படும் டுவிட்டாக மாறியது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியரான டொன் பிரட்மன் ஐஸ்லாந்தில் பிறந்திருந்தால், அவர் மீனவராகவே இருந்திருப்பார் என்று ஐஸ்லாந்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Context and luck is everything in life. If Ravi Ashwin had been born in Sri Lanka, he would probably end his career with as many wickets as Muralitharan. If Don Bradman had been born in Iceland, he'd have scored no international runs and been a below par fisherman. That's life.
— Iceland Cricket (@icelandcricket) December 24, 2021
இந்தியாவின் விராட் கோஹ்லி, தென்னாபிரிக்காவில் பிறந்திருந்தால் அவர் ஒரு பிராந்திய அணியின் வீரராக மாத்திரமே இருந்திருப்பார் என்று ரசிகர் ஒருவர் கருத்துப்பதிவை செய்திருக்கிறார்.
தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ரசிகர்கள், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் டேவிட் வோனர் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
டி வில்லியர்ஸ், இலங்கையில் பிறந்திருந்தால், அவர் ஏனைய இலங்கை வீரர்களை விட முன்னிலையில் திகழ்ந்திருப்பார்.
வோனர் இந்தியாவில் பிறந்திருந்தால், போட்டிகளின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்திருப்பார் என்றும் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.