யாழில் தொழில் அதிபர் திலீத் ஜயவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்(Photos)
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது தொடர்பில் "நோக்கம்" என்ற தொனிப்பொருளில், யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொழில் அதிபர் திலீத் ஜயவீர தலைமையில் இந்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(28.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டின் பொருளாதார சவால்களை எவ்வாறு வெற்றிக்கொள்வது, புதிய தொழில் வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்துவது தொடர்பில் பிரபல தொழிலதிபரும் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளருமான திலித் ஜயவீரவினால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார சவால்
அவரது விளக்கத்தை தொடர்ந்து கலந்துரையாடலுக்கு வருகை தந்தவர்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டதுடன் அதற்கான பதில்களை திலீத் ஜயவீர வழங்கியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ்.மாவட்ட முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி கொடித்துவக்கு, தேசிய ஒருமைப்பாடு இன நல்லிணக்க அதிகார சபையின் பணிப்பாளர் கந்தையா கருணாகரன், யாழ்.வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொழிலதிபர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri