ஜனாதிபதி ரணிலுக்கு பெரும் அதிஷ்டம் - பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் மிகவும் பலமாக உள்ளதாக பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகத்திற்கமைய அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேவையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் ஒரு போதும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாக முடியாதென சரியாக கூறிய ஜோதிடரே இவ்வாறு கூறியுள்ளார்.
ரணிலுக்கு தற்போது ராஜயோகம்..
அதற்கமைய, ரணிலின் இரண்டு வருட ஜனாதிபதி பதவியை எந்த ஒருவர் வன்முறையாலும், போராட்டத்தினாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது. அவரது ஜாதகம் தற்போது ராஜயோகத்தில் உள்ளது.
தற்போதைய ராஜயோகம், எலிசபெத் மகாராணி மற்றும் பிடெல் கெஸ்ரோக்கு மாத்திரமே உள்ளது. இந்த ஜாதகத்தில் குரு உச்சத்தில் உள்ளது. அது மிகப்பெரிய அதிஷ்டத்தை ஏற்படுத்தும்.
ரணில் விக்ரமசிங்கவை ஒக்டோபர் மாதம் விரட்டிவிடலாம் என சிலர் கூறுகின்றார்கள். எனினும் இரண்டரை வருடங்களுக்கு ரணிலை அசைக்க முடியாது. அவர் பதவியில் நீடிப்பார். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் ஏற்படும் மாற்றம்
பெப்ரவரி மாதத்தின் 23ஆம் திகதியின் பின்னரே அவருக்கு இருந்த கிரகங்கள் நீங்கியுள்ளதுடன், அவரது எதிர்கால பயணத்தை ஒரு போதும் தடுக்க முடியாது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பதவி சில நாட்களில் பறிக்கப்படும். அவரது கெட்ட மனசே அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சஜித் மற்றும் அவரது குழுவினரின் ஆதரவையும் ரணில் பெறுவார். சர்வகட்சி அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஒரு போதும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் கொடூர செயல்களை மக்கள் மறந்துவிட்டனர்.
அநுர குமார அரகலய குழுவினர் தூண்டிவிட்டு பதவிகளை கைப்பற்ற முயற்சித்தாலும் அவரால் முடியாது.
அவர்கள் செய்த கொடூரங்களை வார்த்தைகளினால் கூறி விடமுடியாதென ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.