இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இயங்கும் கும்பல்
இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் மேல் மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் இலக்க தகடுகள் திருடப்பட்டு, வாகனங்களுக்கு மாற்றப்பட்டு கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் திருடப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் நிலையங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பொது இடங்களில் துப்பாக்கிப் பாவனை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என குற்றச் செயல்கள் தொடர்பான சமூக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை வழிநடத்தும் சகலரும் இது தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் நபர்களை விசாரணை செய்து உரிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது இந்த பிரிவின் மூலம் செய்யப்பட உள்ளது.