கடவுச்சீட்டுக்காக காத்திருந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை தொடர்பில் வெளியான தகவல்
பத்தரமுல்ல குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டு வரிசையில் நேற்றைய தினம் கர்ப்பிணித் தாய் குழந்தையைப் பெற்றெடுத்தமை தொடர்பான தகவல்கள் அதிகம் பேசப்பட்ட விடயமாக மாறியிருந்தது.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. எனினும் பொய்யான தகவல் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வந்து பல நாட்களாக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிப் பெண், கழிவறைக்குச் செல்லும் போது பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் அவரை பொரளை காசல் வீதி வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், பொரளை காசல் வீதி வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது எனவும், குழந்தை தற்போது வைத்தியசாலையின் முன்கூட்டிய சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த குழந்தையின் உடல் அடக்கம் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.
எனினும் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் தேவாலயங்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டதில் உயிரிழந்த குழந்தையுடன் தொடர்புடைய புகைப்படங்களே இவ்வாறு பகிரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam