ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்- செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது.
இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |