இலங்கையில் சூப்பர் மார்கெட்டுகளாக மாறும் வீடுகள்
நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வீட்டு சுப்பர் மார்க்கெட் வலையமைப்பை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவரது வீட்டின் ஒரு பகுதியில் இந்த சுப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய தெரிவு செய்யப்படும் வீட்டை புதுப்பிப்பதற்கு அல்லது புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 15,000 மில்லியன் ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான நுகர்வோர் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படவுள்ளதுடன் அனைத்து வீட்டு சுப்பர் மார்க்கெட் வலையமைப்புகளும் கணினி தொடர்பு மூலம் இணைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் 14,000 பெண் தொழிலாளர்களை உருவாக்க நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
