வீடுகள், சொத்துக்கள் அழிப்பு:கேட்க நாதியில்லை:முன்னாள் அமைச்சர்கள் கவலை
நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
அவர்கள் இவ்வாறான பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், ஜனாதிபதியோ முன்னாள் பிரதமரோ, கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவோ நிலைமை என்ன என்பது தொடர்பான தேடி அறியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அசௌகரியத்தில் இருப்பதாகவும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமை பற்றி அறிவிக்கக் கூடிய எந்த பொறுப்புவாய்ந்த நபர்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், அவர்களில் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருப்பதாக பேசப்படுகிறது.
தாம் எப்படி,எங்கு இருக்கின்றோம் என்பது சம்பந்தமான எவரும் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்காது குறித்து பலர் வெறுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan