நிலாவெளி பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்த மர்ம நபர்
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மர்ம நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று (14) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
குறித்த நபர் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அத்தோடு, வீட்டு உரிமையாளரின் சமயலறைப் பொருட்கள் உட்பட வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
