மட்டக்களப்பில் வீடு உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து நகை மற்றும் பணம் என்பன திருடிச் சென்ற சம்பவம் நேற்று(29.11.2022) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டிலிருந்த தாலிக்கொடி உட்பட 13 பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபா பணம் திருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலுள்ள ஊறணியில் ஊள்ள குறித்த வீட்டை சம்பவதினமான நேற்று மாலை பூட்டிவிட்டு குடும்பசகிதமாக வெளியே சென்று இன்று புதன்கிழமை காலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
இதன்போது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தாலிக்கொடி மற்றும் 13 பவுண் கொண்ட தங்க ஆபரணங்கள் பணம் திருட்டுப் போயுள்ளது.
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து தடவியல் பிரிவு
பொலிஸார் சகதிம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை
மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்