யாழில் வீடொன்றை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வீடொன்றை உடைத்து நகை, பணம் மற்றும் தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று(14.11.2022) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினை கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உரும்பிராய் பகுதியில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர்
வவுனியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் இருந்து இரண்டரை பவுண்
தங்க சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான
கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
