முல்லைத்தீவு பகுதியில் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு வீடுகளிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.
அனைவருக்கும் தடுப்பூசி எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நடமாடும் சேவை இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று முறிப்பு/பாலைப்பாணி/வன்னிவிளாங்குளம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து மேற்கொள்ளும் குறித்த வேலைத்திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
