உத்தேச வாடகை வரி: சர்வதேச நாணய நிதிய நிபந்தனை குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (19.06.2024) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை. உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |