யாழில் தீக்கிரையான வீடு: பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (06.08.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
விஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் அரச காணி ஒன்றில் தற்காலிகமாக வீடு அமைத்து வசித்துவரும் குடும்பஸ்தர் கடும் குளிர்காரணமாக தனது தாய் வீட்டிற்கு சம்பவ தினமன்று சென்றுள்ளார்.
இரவு 09.00 மணியளவில் காணிக்குள் அத்துமீறி நுழைந்து குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீவைத்து விட்டு விசமிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த பொதுமக்கள், குடும்பஸ்தருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குழந்தையுடன் அவர்கள் உறங்கும் பகுதியிலையே தீ மூட்டப்பட்டுள்ளது.
சம்பவமன்று இரவு அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக குறித்த மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவையாளருக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக , விசாரணைகள் மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |