வவுனியாவில் வீடு தீக்கிரை: பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
வவுனியா - மகாறம்பைக்குளம், மதீனாநகர் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று(02.04.2026) ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து
இதனையடுத்து. தீயை அணைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தபோதிலும், அது பயனளிக்காத நிலையில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தினால் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மின்சார ஒழுக்கு காரணமாக வீட்டில் தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதுடன், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
