அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு அவசர தொலைபேசி எண்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேதம் குறித்து தெரிவிக்க வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்பீட்டு திணைக்களம் பல முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, விவசாயிகள் பயிர் சேதம் குறித்து 1918 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து எளிதாகத் தெரிவிக்கலாம்.
மோசமான வானிலை காரணமாக
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நாட்டின் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளன.

அதன்படி, சம்பந்தப்பட்ட பயிர்களில் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடுசெய்யும் நோக்கில், பயிர் சேதம் குறித்த தரவுகளை சேகரிக்கும் பணியை வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு திணைக்களம் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 20 மாவட்டங்களில் துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளில் சுமார் 75வீதமானவை தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |