இலங்கையில் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்..! ஆபத்து தொடர்பில் கடும் எச்சரிக்கை
இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் மற்றும் மயக்க மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் முடங்கும் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதய நோய்க்கான மருந்துகளையும் வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம் இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு வினவிய போது, மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் மருந்துகள் இன்றி என்னால் உயிர் வாழ முடியாது என்ற போதும் கூட வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை என்பதால் வெளியில் தான் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்? சொத்து மதிப்பு குறித்து உலா வரும் தகவல்.. Cineulagam