நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்
அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
நுவரெலியா ஆதார வைத்தியசாலை உட்பட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
கோவிட் காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் நிலையில் ,சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப் படுவதாகவும் ,தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச தாதியர் சங்கம், அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப் படுவதாகவும் ,தமது கோரிக்கைக்கு முறையான பதில்கள் வழங்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்த வேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இன்றைய பணி பகிஸ்கரிப்பு காரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.





வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
