பொலிஸ் குதிரைப்படை பிரிவின் குதிரைகளுக்கு உள்ளூர் தானியங்களை வழங்கும் நடவடிக்கை வெற்றி
டொலர் நெருக்கடியின் விளைவாக இலங்கை பொலிஸ் குதிரைப்படைப் பிரிவின் குதிரைகளுக்கு உள்ளூர் தானியங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை வெற்றியளித்துள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் டொலர் நெருக்கடியின் காரணமாக குதிரைகளுக்கு தேவையான உணவை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை மற்றும் சோளம் போன்ற உள்ளூர் தானியங்களை படைப்பிரிவின் குதிரைகளுக்கு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வேலைத்திட்டம்
குதிரைகளுக்குத் தேவையான உணவை இறக்குமதி செய்ய இயலாமை, இறுதியில் அவற்றின் எடையைக் குறைத்து மெலிந்து போவதற்கு காரணமானது.
எவ்வாறாயினும், புதிய வேலைத்திட்டத்தின் மூலம், குதிரைகளின் எடையில் ஒரு
தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளாதாக குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
