இங்கிலாந்தில் புகலிட கோரிக்கையாளர்களிடையே பரவும் நோய் தொற்று - சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை
இங்கிலாந்திலுள்ள Manston என்ற புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்தில் பலருக்கு டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில் 39 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையங்கள் தொற்றுநோய் பரவும் பயங்கர அபாயத்தில் உள்ளதாக கருதப்பட வேண்டும் என பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி எச்சரித்துள்ளது.
உள்துறை அலுவலகத்தை அணுகும் சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி
இந்நிலையில்,உள்துறை அலுவலகத்துடன் இணைந்து புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தடுப்பூசிகளும் ஆன்டிபயாட்டிக்குகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சியின் இணை இயக்குநரான Dr காயத்ரி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்விண்டன், ஷெஃபீல்ட், கென்ட், பர்மிங்காம், ஹெட்ஃபோர்ட்ஷையர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் ஆகிய இடங்களிலும் இந்த டிப்தீரியா தொற்று பரவியுள்ளது.