ஈரானின் முதுகெலும்புக்கு வைக்கப்படும் இலக்கு! நரகத்தை காட்டுவோம் - மிரட்டும் அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்ற அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தரைவழித் தாக்குதலுக்கு (Ground Ops) தயாராகி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளன.
ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பைத் தகர்க்க ட்ரம்ப் நிர்வாகம் இந்த 'மாஸ்டர் பிளானை' கையில் எடுத்துள்ளது.
3,500 கடற்படை வீரர்கள்
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 3,500 கடற்படை வீரர்கள், USS திரிப்போலி கப்பல் மூலம் அதிரடி வீரர்கள் போர்க்களத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

F-35 ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்குத் தயார் நிலையில் உள்ளன. வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் இது குறித்துக் கூறுகையில், "ஜனாதிபதி டிரம்ப் வெறும் வெற்று மிரட்டல் விடுபவர் அல்ல.
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், அவர்கள் இதுவரை பார்த்திராத நரகத்தை (Unleash Hell) அமெரிக்கா காட்டும்" என பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல் ஈரானை முழுமையாக ஆக்கிரமிப்பதற்காக அல்லாமல், அந்நாட்டின் ஆயுதக் கிடங்குகளை அழிப்பதற்கும், பேச்சுவார்த்தையில் ஈரானை பணிய வைப்பதற்கும் ஒரு 'பேரம் பேசும் கருவியாக' (Bargaining Chip) இருக்கும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரக்கணக்கில் நீடிக்கக்கூடிய இந்தத் தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலில் 165 சிறுமிகள் பலியான கோர சம்பவம்! இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் - குற்றவாளிகளை அறிவித்த ஈரான்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam