இலங்கையில் மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல் : பாராட்டும் பொலிஸார்
அனுராதபுரத்தில் இரண்டு மாணவிகளின் நேர்மையான செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மீகலேவ நகர வீதியொன்றில் கிடந்த பெருந்தொகை பெறுமதியான தங்க நகைகளை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருள் மற்றும் பணப்பை ஒன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் செயல்
மீகலேவ மஹாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவிகள் இருவரே இந்த செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் கொண்டு வந்த தங்க பொருட்கள் மற்றும் பணப்பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் பாராட்டு
சமூக விழுமியங்கள் அழிந்து வரும் சமூகத்தில் இவ்வாறான செயலை செய்த இரண்டு மாணவிகளின் நேர்மையை பாராட்டிய பொலிஸார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நற்செயல்களை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்துமாறு பொலிஸார் கடிதம் மூலம் அவர்கள் கற்கும் பாடசாலையின் அதிபருக்கு தெரிவித்துள்ளனர் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
you may like this video
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri