நான்கு பேர் கொண்ட குழுவினரால் வீடொன்று சேதமாக்கப்பட்டது
அடையாளம் தெரியாத கும்பலால் வீட்டுடமைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
4 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் பிரதான வாயிலை அடித்து உடைத்து சேதமாக்கிய பின்னர் வீட்டின் முன் கதவினை முற்றுமுழுதாக சேதப்படுத்தியுள்ளனர்.
தீயிட்டு எரிக்க முயற்சி
வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி மேசை கதிரை என பெறுமதிமிக்க பல பொருட்களையும் சேதமாக்கியதுடன், வீட்டுக்கதவைத் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக தனது கணவனை இழந்த நிலையில் 5 ஜந்து பிள்ளைகளுடன் வசித்து வந்த குடும்பத்திற்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் நேரில் சென்று
பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
