கடுமையான நோய் அறிகுறியற்ற சிறுவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை
கடுமையான நோய் அறிகுறி இல்லாத சிறுவர்,சிறுமியருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்காகி கடுமையான நோய் அறிகுறிகள் எதுவும் தென்படாத சிறுவர்,சிறுமியரை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று முன்னேடுக்கப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு கூடுதலாக நீராகாரம் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சிறுவர் சிறுமியருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பரசிமிட்டமோல் உரிய மாத்திரை அளவில் வழங்கி, வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது டெங்கு நோயும் பரவி வருவதனால் சிறுவர்களை அதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
