வீடு புகுந்து திருட முற்பட்டவரை நையப்புடைத்த பொதுமக்கள் (Photos)
வவுனியா - பத்தினியார் மகிலங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (25.06.2023) இடம்பெற்றுள்ளது.
மகிலங்குளம் கிராமத்தில் வீடொன்றுக்குள் குறித்த நபர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை

எனினும் சந்தேகநபரை மடக்கிப்பிடித்த மக்கள் அவரை நையப்புடைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam