பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை: இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து நேற்று பகல் முச்சக்கரவண்டியில் வந்த கொள்ளையர்கள் வீட்டினை
உடைத்து வீட்டிலிருந்த பணம், நகை என்பனவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகப்
பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக தர்மபுரம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது தர்மபுரம் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
பொதுமக்களின் உடைமைகள் மற்றும் வீட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்
திணைக்களத்தினால் மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெறுமதியான
பொருட்களை வைத்திருப்பவர்கள் உங்கள் வீடுகளின் பாதுகாப்பினையும்
உறுதிப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
