ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விளக்கம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட சிலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
“ஹோமாகம நகரில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை பார்க்க மேலும் 4 பேர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸாரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு பொலிஸ் அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |