நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..
புதிய இணைப்பு
தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தீவிர வானிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளைய தினமும்(04/07/2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்விப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாடசாலைகளுக்கான விடுமுறை
அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO