இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! வெளியானது தகவல்
அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் விசேட விடுமுறைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா(Kabila Perera) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் பரவல் காரணமாகப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாட்டில் கோவிட் பரவல் குறைவடைந்து வந்த நிலையில் தற்போது பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு, கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
