ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பதற்றத்தின் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா
ஹிஸ்புல்லாவுடனான மோதலை தணிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீன்(amos hochstein) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின்போது, இஸ்ரேலிய அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் அவர் சந்திப்பார் என கூறப்படுகிறது.
அவருடனான நிகழ்ச்சி நிரலில் இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள், முன்னாள் போர் அமைச்சரவை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட எல்லை
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 2022 ஆம் ஆண்டு கடல் எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் உதவிய ஹோச்ஸ்டீன் , கடந்த மாதம் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட்டில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே "சமாதானத்தை" எதிர்பார்க்கவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.
எனினும் இருவருக்குமிடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லையை முதன்முறையாக நிறுவுவதன் மூலம் மோதலின் தீவிரத்தை குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[MK6LHV8
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
