இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு: கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சமூக மருத்துவ ஆலோசகர் டாக்டர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார்.
இன்று(13.07.2026) சுகாதார அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களை தாக்கும் வைரஸ் தொற்று
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பெண்களை விட இந்த தொற்றால் அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பாலியல் பழக்கவழக்கங்களே எச்.ஐ.வி பரவுவதற்கான முக்கிய வழியாக உள்ளது என்றும், போதைப்பொருள் பயன்படுத்துவோர் ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற ஊசி உபகரணங்களைப் பகிர்ந்துகொள்வதும் இந்த வைரஸ் பரவுவதற்குக் காரணமாகிறது என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி-யை முழுமையாகக் குணப்படுத்த முடியாது நோயாகவே பார்க்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன், எச்.ஐ.வி, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) மற்றும் ஹெபடைடிஸ் ஆகியவற்றைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்காக, தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் திட்டம் ஆரம்பம்
ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், இலவச மற்றும் இரகசியமான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே பதிவாகி வந்தாலும், புதிதாகப் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றனர்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிக மக்கள் தொகை இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் அநுர அரசை ஆட்டம் காணச் செய்யும் ஒரு சதி! விரைவில் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்