இலங்கையில் 15 வயதினர் மத்தியில் எச்ஐவி- வைத்தியரின் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்ஐவி பரவல் கண்டறியப்பட்டுள்ளது
எச்ஐவி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 3700 எச்ஐவி தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 60வீதமானோர் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
40 வீதமானோர் சமூகத்துக்கு மத்தியில், தாம் எச்ஐவி தொற்றாளர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம், சமூகத்தில் பாலியல் கல்வி இல்லாமையாகும் என்று வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இளையோர் மத்தியில் 90வீதமான உடலுறவுகள், பாதுகாப்பற்ற முறையில் இடம்பெறுவதும் எச்ஐசி சமூகத்தில் பரவுவதற்கான காரணம் என்று எச்ஐவி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
