போராட்டத்திற்கு மக்கள் எதிர்பார்க்காத ஹிட்லரின் தீர்வுகள்: ஓமல்பே சோபித தேரர் கண்டனம்
மக்கள் போராட்டத்திற்கு ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேரரின் கருத்து
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“காலி முகத்திடலை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வேதனையளிப்பதுடன், முறையற்ற செயற்பாடுமாகும்.
ஜனாதிபதி செயலகத்தை விட்டு இன்று வெளியேற ஆர்ப்பாட்டக்காரர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்துவது தேவையற்ற செயல்.
வன்முறை முடிவல்ல
உலகில் எந்த ஒரு நாடும் பலத்தை பயன்படுத்தி எதிர்ப்புக்களை அடக்குவது மன்னிக்க முடியாத செயல்.
சர்வதேச சமூகங்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளன” என தெரிவித்துள்ளார்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
