வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை: சிறீதரன் (Photos)
வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - விநாயகபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தர கல்விக்குத் தகுதியுடைய மாணவர்களையும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி மற்றும் 40 வருடங்களாகக் குறித்த கிராமத்தில் பல சமூக சேவைகளை ஆற்றிவந்த மதியவர் சுந்தர்ரஜ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இவர்களை இன்றைய நிகழ்வில் கௌரவிப்பது என்பதற்குப் பின்னால் பலரது உழைப்பு உள்ளது. அவர்களுடைய கல்விக்கும் பலரது உழைப்பு வழிகோலியது. அதே போன்று 40 வருடங்களுக்கு மேல் வளர்த்த முதியவரையும் நன்றியுணர்வோடு கௌரவப்படுத்தியுள்ளனர்.
வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை. தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் கொண்டு செல்லும். உதாரணமாக ஒரு பூட்டினை செய்யும் தொழிலாளி ஒவ்வொரு பூட்டுக்கும் சாவிகளைச் செய்கின்றான்.ஆனால் ஒரு சாவியைக் கொண்டு மற்றைய பூட்டை திறக்க முடியாது.
ஒரு சாதாரண தொழிலாளியாக இதனைச் செய்ய முடியுமென்றால் இறைவனால் ஏன் செய்யமுடியாது.நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவில் இந்த மண்ணிலேயே பிரசவிக்கப்பட்டவர்கள்.
விடுதலை உணர்வுடன் வாழ்பவர்கள். வரலாறுகள் வித்தியாசமானது பல கனவுகளோடு
வாழ்ந்தவர்கள் இன்றும் ஆத்மாக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின்
கனவுகள் என்றோ ஒருநாள் நனவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan