வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலின் வருடாந்த உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் திருக்கோயிலின் வருடாந்த உற்சவமானது நாளைய தினம் (14.09.2023) காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இதற்கான பூரண ஏற்பாடுகள் இன்று(13.09.2023) இடம் பெற்று வருகின்றன.
விசேட திருவிழாக்கள்
தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள உற்சவத்தில் விசேட திருவிழாக்களாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழாவும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழாவும், 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தமும் இடம்பெற்றவுள்ளது.
அதேவேளை 30ஆம் திகதி இடம்பெறும் கேணித்தீர்த்தினையடுத்து அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ள திருவிழாக்களில் அடியார்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையில் இடம் பெற்றுவருகின்றன.
மேலும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை பிரதேச சபை ஆகியன ஆலய சூழலில் பாதுகாப்பு, குடி நீர் மற்றும் சுற்றுச்சுழல் தூயமைப்படுத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் தனது கடமைகளை இன்றே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
