காத்தான்குடி, களுத்துறை, புத்தளம் மாநகர சபைகளை கைப்பற்றுவோம்! ஹிஸ்புல்லாஹ் நம்பிக்கை
நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் காத்தான்குடி, களுத்துறை மற்றும் புத்தளம் மாநகர சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்று ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு காத்தான்குடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் நம்பிக்கை
தொடர்ந்தும் அங்கு கருத்து வௌியிட்ட அவர்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
காத்தான்குடி மாநகர சபைத் தேர்தலில் குறைந்தது பத்து வட்டாரங்களை நாங்கள் வென்றெடுப்போம்.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் களுத்துறை, புத்தளம் மாநகர சபைகளை நாங்கள் வென்றெடுப்போம்.
அதற்கும் மேலதிமாக வேறு சில இடங்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
