சிறுபான்மை மக்களின் ஆதரவு யாருக்கு - ஹிருனிகா பிரேமசந்திர
நாட்டில் சிறுபான்மை மக்களின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கே உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தவொரு அரசாங்கமோ கட்சியோ நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மகளிர் அணியின் கூட்டமொன்று தலவாக்கலையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினை
நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றால் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |