தேசபந்துவின் நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானது: சஜித்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நியமனம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னக்கோனை புதிய பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியல் அமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது குறித்து அரசியல் அமைப்பு பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது நான்கு பேர் ஆதரவாக வாக்களித்தனர்.இரண்டு பேர் எதிர்த்தனர் எனவும் மேலும் இரண்டு பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
சம அளவிலான வாக்குகள்
தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஐந்து வாக்குள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். சம அளவிலான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் சபாநாயகர் ஒரு பக்கத்திற்கு வாக்களிக்க முடியும்.
எனினும் அவ்வாறு இங்கு சமனிலை வாக்குகள் அளிக்கப்படவில்லை.எனவே நாட்டின் அரசியல் அமைப்பு கண் மூடித்தனமாக இரண்டாம் தடவையாக மீறப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |