சர்ச்சையை கிளப்பிய தனது காணொளிக்கு பதிலளித்த ஹிருணிகா
கொழும்பு மாநகர சபையின் பாதீடு தோல்வியை கொண்டுவதற்காக நான் பார்ட்டி போடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பாதீடு தோல்வியை கொண்டுவதற்காக நான் பார்ட்டி போட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றை செய்துள்ளார்.
காணொளியால் ஏற்பட்ட சர்ச்சை
இந்த காணொளி சமூகத்தில் ஒரு தவறான கருத்துக்களை பரப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒக்டோபரில் எனது கடுவளை தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவிகளுக்காக ஒரு பார்ட்டி நடத்தப்பட்டது.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொண்டிருந்தார்.அன்று இரவு நடந்த பார்ட்டியில் குதூகலமாக இருந்த காணொளிகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை பாதீட்டில் தேசிய மக்கள் சக்தியின் தோல்வியைக் கொண்டாட இந்த பார்ட்டியை செய்ததாக தவறான செய்தியை பரப்பியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.