ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 2இல் மீண்டும் விசாரணை
2022ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியின்போது, வீதிகளை மறித்ததாகவும் மற்றும் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் பல பெண் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இவ்வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாகவும், அது தொடர்பான விசாரணைக் கோப்பு மேலதிக அறிவுறுத்தல்களுக்காக தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீதிபதி இந்த வழக்கை நவம்பர் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
மேலும் அன்றைய தினம் வழக்கின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது