சுவிஸர்லாந்தில் ஞானலிங்கர் பெருவிழா 2023 (Photos)
சுவிஸர்லாந்தில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மங்கல ஆண்டுத்திருவிழா சிறப்புக்களுடன் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மங்கல ஆண்டுத்திருவிழா 19. 08. 2023 முதல் 29. 08. 2023 மிகுசிறப்புக்களுடன் நடைபெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்தில் 1994ல் நிறுவப்பட்ட சைவநெறிக்கூடம் எனும் பக்தி அமைப்பு 2007ம் ஆண்டு முதல் தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை நிறுவி, கருவறையில் தமிழ் ஒலிக்க வழிபாட்டினை ஆற்றி வருகின்றனர்.
இக்கோவில் (01.02.2015) ஆம் ஆண்டு பேர்ன் நகரின் நடுவப்பகுதியில் திருக்கோபுரத்தில் நான்கு சமயக்குரவர்களும் எழுந்துநிற்க தமிழ்வழிபாட்டுக்கோவிலாக திகழ்கின்றது.
இந்த நிகழ்வில் செந்தமிழ் அருட்சுனையர் சிவபசி. குழந்தை விக்னேஸ்வரன் ஐயா கொடியேற்றி வைத்தார். தமிழர்கள் முதல் தமிழர் அல்லாதவர் வரை, சிறியவர் முதல் பெரியவர் வரை, திருவிழா ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து பெருவிழாவாக கொண்டாடியுள்ளனர்.
ஞானலிங்கர் திருக்கோவில் திருவிழா சமயம் சார்ந்த வழிபாட்டினைத்தாண்டி, சமயம் கடந்து தமிழினத்தின் நிகழ்ச்சிகளை நினைவு கூறும் வகையிலும், எத் தெய்வத்தை வேண்டினும் அத்தெய்வ வழிபாடாகவும், எல்லாம் வல்ல ஒரு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.