சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு
யாழ். வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வானது சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலைமையில் நேற்றுமுன் தினம்(06.04.2024) காலை நடைபெற்றுள்ளது.
சைவ கலை வாராந்த நிகழ்வு
இதன்போது, முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டதுடன் தொடர்ந்து பக்தி கானங்கள் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஆச்சிரமத்தின் வாராந்த தர்ம பணியாக ஒருவருக்கு மலசல கூடம் அமைப்தற்கான நிதி உதவியும், கெடுடாவிலில் வருட பிறப்புக்காக 25,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரம தொண்டர்கள், இசைக் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.