சிங்கள பொலிஸாருக்கு இந்து பௌத்த பேரவையால் தமிழ் கற்பிக்க நடவடிக்கை
இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி கற்பிப்பதற்கு இந்து,பௌத்த பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து பௌத்த பேரவையின் பொதுச்செயலாளர் தேசமானிய எம்டிஎஸ் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கிலுள்ள சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கு இந்து பௌத்த பேரவையை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியதன் அடிப்படையில் குறித்த விடயம் இடம்பெறவுள்ளது.
வடமாகாணத்தில் பௌத்த இந்து பேரவை ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்த நிலையில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இரண்டாம் மொழியான சிங்கள அறிவைப் பெற்று சான்றிதழ்களுடன் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி மூலமான அறிவை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
குறித்த பயிற்சியின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நிலவுகின்ற தமிழ் மொழிப் பிரச்சனைக்கு படிப்படியாகத் தீர்வு காண முடியும்.
வடக்குப் பொலிஸாருக்கு குறித்த பயிற்சியை வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிபாரிசினை இலங்கைப் பொலிஸ் திணைக்களம் எமக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆகவே பெயர் விபரங்கள் கிடைத்தவுடன் ஐந்து மாவட்டத்திலும் பிரத்தியேக தயார்
செய்யப்பட்ட இடங்களில் பொலிஸாருக்கான தமிழ் மொழிப் பயிற்சி வழங்கப்படும் என
இராமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri