மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து தொடருந்து சேவைகளும், மண்சரிவு காரணமாக நானுஓயா தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த மண்சரிவு, நேற்றையதினம் (18.11.2025) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட மண்சரிவினால் பல பெரிய பாறைகள் தொடருந்து என்ஜின் மீது விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
விபத்துக்குள்ளான தொடருந்தின் பயணிகள் பெட்டிகள் பாதுகாப்பாக ஹப்புத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் இருந்து பாறைகளை அகற்றவும், தடம் புரண்ட தொடருந்து பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தவும், நானுஓயா தொடருந்து நிலைய மீட்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் தற்காலிகமாக நானுஓயா தொடருந்து நிலையத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |