அரபிக்கடலில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை காப்பாற்றும் முயற்சியில் இந்திய கடற்படை : செய்திகளின் தொகுப்பு
அரபிக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சோமாலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது.
அதேவேளை, அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று அரபிக் கடல் பகுதியில் 18 பேருடன் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டு சரக்கு கப்பலை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
