ஹம்பாந்தோட்டையில் அதிகூடிய உப்பு விளைச்சல்
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இலங்கை உப்புக் கூட்டுத்தாபனத்தின் உப்பளத்தில் இம்முறை அதிகூடிய உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளது.
தற்போதைய பெரும்போக உப்பு விளைச்சலின்போது சுமார் நாற்பதினாயிரம் தொன் உப்பு ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் விளைவிக்கப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதி
அதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் இன்னும் சில ஆயிரம் தொன்கள் உப்பு விளைச்சலைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளம் உப்பளத்திலும் சிறந்த உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளதாக உப்புக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான உப்பு இம்முறை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்பட்டுள்ளதுடன், உப்பு இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



