தென்னை பயிர்ச்செய்கை மூலம் அதிகளவில் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது : அருந்திக்க பெர்னாண்டோ( PHOTOS)
தென்னை பயிர்ச்செய்கை மூலம் வருமானமாக 900 டொலர் மில்லியன் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தென்னை கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சில் வைத்து நேற்று (09) பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வருமானம் குறையும்போது, தென்னை பயிர்ச்செய்கை வெற்றி பெற்றுள்ளதை நினைத்து நாம் பெருமிதம் அடைகின்றோம்.
சாதாரணமாக வருமானம் ஆண்டிற்கு 2.8 மில்லியன் வருமானம் கிடைக்கின்றது அவற்றில் 1.8 மில்லியன் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. மிகுதியாக உள்ள சிறு தொகையானது மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் வருமானம் கிடைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அந்நிய செலவாணி குறைவாக செல்வதால் இளம் விவசாயிகளுக்கு தென்னை பயிர்ச்செய்கையை கையளித்து அதன் வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர்களை தெரிவு செய்து செயற்படுத்தவுள்ளோம்.
இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலகத்தை தெரிவு செய்து புதிய தென்னை பயிர்ச்செய்கைகளை தெரிவு செய்து ஒன்று அல்லது இரண்டு நிலையங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது எனது இலக்காகும்.
இந்த வேலைத்திட்டமானது கிராமத்துடன் இணைந்து கப்ரூக சமூர்த்தியின் ஊடாக 100 ரூபாவை செலுத்தி உறுப்பினராகினால் 5000 தென்னை விதைகளை வாங்கலாம். ஒரு தென்னம் பிள்ளையானது 150 ரூபாயாகும், வடமாகாணத்தில் இவ் வேலைத்திட்டமானது நடைப்பெற்றது.
தொடர்ந்து வரும் காலங்களில் கிழக்கிலும் நடைபெறும், தென்னை கித்துல் செய்கை மேம்பாட்டு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் மேலும் உற்பத்தி செய்து ஏற்றுமதி மேம்படுத்தப்படும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.







950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
